கோலியை புகழ்ந்த சாருலதா பாட்டி மரணம்! பிசிசிஐ இரங்கல்!!

 

கோலியை புகழ்ந்த சாருலதா பாட்டி மரணம்! பிசிசிஐ இரங்கல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான சாருலதா(87) பாட்டியின் மரணத்துக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான சாருலதா(87) பாட்டியின் மரணத்துக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி உடானான போட்டியைக் காண வந்த சாருலதா இந்திய அணியினரிடம் பெரும் கவனம் பெற்றார். தள்ளாடும் வயதிலும் கிரிக்கெட் மீதான அவரது ஈர்ப்பைக் கண்டு வியந்த இந்திய அணியின் கேப்டன் கோலி இனி வரும் போட்டிகளிலும் சாருலதா குடும்பத்துடன் போட்டிகளை காண டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து இந்தி‌ய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்று 87 வயது கிரிக்கெட் ரசிகை சாருலதா‌ இ‌லங்கை அணியுடனான போட்டியை காணவும் மைதானம் வந்திருந்தார். அவர் இன்று காலமானார்.

BCCI

சாருலதா பாட்டிக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது, “இந்தியாவின் சூப்பர் ரசிகரான சாருலதா படேல் ஜி எப்போதும் விளையாட்டு வீரர்களின் இதயத்தில் நிலைத்திருப்பார், மேலும் அவரின் விளையாட்டின் மீதான ஆர்வம் விரர்களை ஊக்கப்படுத்தியது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” என ட்விட்டரில் பிசிசிஐ பதிவிட்டுள்ளது.