கோலார் தங்க சுரங்கத்தில் திருட முயன்ற கும்பல்.. 1000 அடி ஆழம் சென்று ஆக்சிஜன் இல்லாமல் 3 பேர் உயிரிழப்பு!

 

கோலார் தங்க சுரங்கத்தில் திருட முயன்ற கும்பல்.. 1000 அடி ஆழம் சென்று ஆக்சிஜன் இல்லாமல் 3 பேர் உயிரிழப்பு!

இதன் காரணமாக அந்த சுரங்கம் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. 

உலகின் 2ஆவது ஆழமான கோலார் தங்கச் சுரங்கத்தில், கடந்த 121 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் உழைப்பினால்  தங்கம் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் சுரங்கத்தில் இருப்புக்குறைவு, தங்கத்தை பிரித்து எடுத்துக் கொள்ள ஆகும் செலவு உள்ளிட்ட காரணத்தினால் அந்த சுரங்கம் மூடப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை மீண்டும் திறக்க முடிவெடுத்த மத்திய அரசு, தற்காலிகமாக அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக அந்த சுரங்கம் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. 

ttn

இந்நிலையில் அந்த சுரங்கத்தில் 5 பேர் கொண்ட கும்பல் திருட சென்றுள்ளனர். முதலில் இறங்கிய 3 பேர் 1000 அடிக்கு கீழ் சென்றதால் ஆக்சிஜன் கிடைக்காமல் மயங்கி விழுந்துள்ளனர். மற்ற இருவரும் இதனைக் கண்டு, அவர்களை மீட்க முயன்றுள்ளனர், ஆனால் முடியாததால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நேற்று இரவு 11 மணிக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் தீயணைப்பு வீரர்கள் 1000 அடி ஆழத்தில் இறங்கிய 3 பேரில் 2 பேரை மட்டும் சடலமாக மீட்டுள்ளனர். மற்ற ஒருவரை மீட்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கோலார் சுரங்கத்தில் திருட முயன்ற போது உள்ளே சிக்கிக் கொண்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.