கோலாகலமாக நடக்கவிருக்கும் ஈஷா மகா சிவராத்திரி விழா.. பக்தர்களுக்கு மஹா அன்னதானம்!

 

கோலாகலமாக நடக்கவிருக்கும் ஈஷா மகா சிவராத்திரி விழா.. பக்தர்களுக்கு மஹா அன்னதானம்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 26 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி விழா வரும் 21 ஆம் தேதி 
(நாளை மறுநாள்) கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 26 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி விழா வரும் 21 ஆம் தேதி 
(நாளை மறுநாள்) கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்த விழாவில் லெபனான் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சியும், பிரபல பாடகர் அந்தோணி தாசன் பாடலும்,  ‘கபீா் கஃபே’ குழுவினர் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களுடன் உற்சாகமாக நடைபெற உள்ளது. இது குறித்து ஈஷா யோகா மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

ttn

அதில், “கோவை ஈஷா யோக மையத்தில் வருடாவருடம் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெருமளவில் கூடும் பிரம்மாண்ட விழாவாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு பெருமளவு கூடும் மக்கள் அனைவருக்கும் அன்றிரவு முழுவதும் மகா அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புத தன்மையாகும் இது நம் கலாச்சாரத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையாகப் பார்க்கப்படுகிறது. 

ttn

 அன்னதானம் பற்றி சத்குரு அவர்கள் கூறியுள்ளதாவது, “நீங்கள் மிகுந்த பசியில் இருக்கும் போது உங்கள் தட்டில் உள்ள உணவினை உங்கள் அருகில் இருப்பவருக்கு வழங்கினால் உங்கள் பலம் அந்த உணவு உண்பதைக் காட்டிலும் அதிகமாகும்” என்று புத்தர் தம் சீடர்களுக்குக் கூறினார். 

ttn

யோக மையத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மகா சிவராத்திரி விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் விழாவில் சத்குரு அவர்கள் வழங்கும் தியானம் நாட்டுப்புற மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டு மாடுகள் கண்காட்சி போன்றவை இடம் பெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதேபோல விழா நாட்களில் கோவையிலிருந்து ஈஷா யோக மையத்திற்குச் சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன அனைவரும் வருக.. அனுமதி இலவசம் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.