கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளிகளை பார்ப்பதற்கு திரண்ட மக்கள்! ஏன் தெரியுமா?

 

கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளிகளை பார்ப்பதற்கு திரண்ட மக்கள்! ஏன் தெரியுமா?

அகமதாபாத், வதோராவை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு 11 மணிக்கு தெருவில் சென்றுகொண்டிருந்தார்.

அகமதாபாத், வதோராவை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு 11 மணிக்கு தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமி சிலரால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக கிஷன், சாஷா சோனல்கி இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். குற்றவாளிகள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ttn

குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்து வைத்தனர். அப்போது அவர்களை காண ஏராளமான வழக்கறிஞர்களும், பொதுமக்களும் நீதிமன்ற வாயிலில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்து குற்றவாளிகளும் காவல்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர். குற்றவாளிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் அவர்களை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர். 

ttn

இந்த வழக்குக்குறித்து பேசிய அரசு வழக்கறிஞர் அணில் தேசாய், “குற்றவாளிகள் இருவரும் தீர விசாரிக்கப்படவேண்டும்,அவர்கள் எப்படி தவறு செய்தார்கள்? எப்படி அவ்விடத்திற்கு வந்தார்கள்? இவையெல்லாம் விசாரிக்கவேண்டும், மருத்துவ பரிசோதனையும், குற்றவாளிகளுக்கு நடத்தப்படவேண்டும்” என தெரிவித்தார்.

accused

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ” குற்றவாளிகள் தப்பிச்செல்ல முடியாது, அதற்கு எந்த வழியுமில்லை, மேலும் அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவரும் குற்றம் செய்ததை  ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தவறு செய்ததும் என்ன செய்வதென்று தெரியவில்லை, அவர்கள் தப்பி செல்ல முடியாது, மேலும் அவர்கள் செய்தித்தாள், தொலைக்காட்சி எதையும் பார்க்கவில்லை ஆதலால் அவர்களுக்கு என நடக்கிறதென்றும் தெரியவாய்ப்பில்லை”  என தெரிவித்தனர்.