கோயில் பிரசாதத்தில் விஷம் வைத்த வழக்கு: 3 பெண்கள் கைது

 

கோயில் பிரசாதத்தில் விஷம் வைத்த வழக்கு: 3 பெண்கள் கைது

கர்நாடகாவில் கோயில் பிரசாதத்தில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில், 3 பெண்களை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூர்: கர்நாடகாவில் கோயில் பிரசாதத்தில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில், 3 பெண்களை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவின் சிக்கபல்லபுரா நகரில் கங்கம்மா தேவி என்ற கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி  இங்கு அடையாளம் தெரியாத சில பெண்கள் வந்துள்ளனர்.  அவர்கள் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அல்வா பிரசாதத்தினை வழங்கியுள்ளனர். பிரசாதத்தைச் சாப்பிட்டதில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இது தொடர்பாக லட்சுமி, அமராவதி மற்றும் பர்வதம்மாள் ஆகிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பெண்கள் மீதும் ஐபிசி பிரிவு 304 (கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்ககூடிய குற்றத்திற்கான தண்டனை) -இன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.