கோயில் திருவிழாவில் ஆடிப்பாடிய வடிவேலு: எதற்காகத் தெரியுமா?

 

கோயில் திருவிழாவில் ஆடிப்பாடிய வடிவேலு: எதற்காகத் தெரியுமா?

சிறப்பு  விருந்தினராக அழைக்கப்பட்ட வடிவேலு வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார்.

சிவகங்கை : உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில்  தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

vadivelu

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோவிலில்  புரவி எடுப்பு திருவிழா  நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.  இந்நிலையில் இந்த  விழாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு குடும்பத்துடன் கலந்து கொண்டார். குறிப்பாக  கலியாந்தூர் வடிவேலுவின் மனைவிக்குச் சொந்த ஊர் என்பதால் விழவிற்கு சிறப்பு  விருந்தினராக அழைக்கப்பட்ட வடிவேலு வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார். மேலும் மேடையில் எட்டணா இருந்தா என்பாட்டை கேட்கும் பாடலை பாடியும் நடனமாடியும் அங்கிருந்தவர்களை உற்சாகமூட்டினார். 

vadivelu

அப்போது விழாவில் பேசிய  வடிவேலு, ‘ அடிக்கடி ஊரைக்காக்கும் அய்யனாருக்கு விழா எடுத்து, மழை பெய்விக்க வேண்டும். தண்ணீர் பிரச்சனை தற்போது உலக பிரச்சனையாகி விட்டது. அதனால் நீரை சேமிக்க வேண்டும். சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு இளைஞர்கள் தான் முன்வர வேண்டும். நம் நாட்டின் பாரம்பரியமும், பண்பாடும் திருவிழாக்களில் தான் உள்ளது. அதனால் இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.