கோயில் திருவிழாவில் அமைச்சர் எஸ்பி வேலுமணி அசத்தல் நடனம்-வீடியோ

 

கோயில் திருவிழாவில் அமைச்சர் எஸ்பி வேலுமணி அசத்தல் நடனம்-வீடியோ

கோயில் திருவிழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை: கோயில் திருவிழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இவர் கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே கைகோளபுரம் என்னும் ஊரில் நடைபெற்ற சித்திவிநாயகர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார். கோயில் விழாவில் ஒயிலாட்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, நடன கலைஞர்களுடன் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி உள்ளிட்டோர் நடனமாடி அசத்தினர்.

அமைச்சர் வேலுமணி, ஆறுகுட்டி உள்ளிட்டோர் நடனமாடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சர் வேலுமணி மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய செய்திகளில் வெளிவந்தது. ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என கூறி அதனை அமைச்சர் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.