கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம்

 

கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம்

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஊரடங்கால் அனைத்து விதமான மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கபட்ட ஓரிரு வாரத்தில்  தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் மாத சம்பளமில்லாமல் தட்டு காசு மட்டுமே பெற்று பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

கோவில் பூசாரி

இந்நிலையில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் உள்ளிட்டோருக்கு மேலும் 1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.