கோயில்களையாடா கட்டுறீங்க..? விடமாட்டேண்டா… உடுக்கை அடிக்கும் தி.க.வீரமணி..!

 

கோயில்களையாடா கட்டுறீங்க..? விடமாட்டேண்டா… உடுக்கை அடிக்கும் தி.க.வீரமணி..!

கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றா விட்டால், போராட்ட வடிவத்திலும், நீதி மன்றம் வாயிலாகவும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்தவித மத வழிபாட்டுச் சின்னங்களும் இடம்பெறக் கூடாது என்று விதிமுறை இருந்தும், அதற்கு மாறாகக் கோவில்கள் பல இடங்களில் கட்டப்படுகின்றன. இவற்றை அகற்றா விட்டால் போராட்டம் – சட்ட ரீதியாக நீதிமன்றம் இவற்றின்மூலம் தீர்வு காணப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர்  வீரமணி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர், ’’தந்தை பெரியாரின் ஜாதி ஒழிந்த சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச் சராக இருந்தபோது பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கினார்.

பெரும்பாலான பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உள்ளாட்சித் துறை அமைச்சராகவிருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே திறந்து வைத்தார்.பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் மதவழிபாட்டுச் சின்னங்களுக்கு இடம் கிடையாது. அப்படி உண்டாக்கப்பட்ட சமத்துவபுரங்களில் எந்தவித மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்பது விதி.

temple

கன்னியாகுமரி மாவட்டம் செண்பக ராமன் புதூரில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்  விதிகளுக்கு முரணாகப் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அலமேலுபுரத்திலும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோவில் எழுப்பப்பட்டது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதப் பட்டது. எந்தவித சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

இப்பொழுது கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கழுதூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்திலும் ஓம் சக்தி ஆலயக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது. மங்களூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு மு.நடராசன் இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம்மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
 
இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 2000-2001 சமத்துவபுரம் குடியிருப்பு அமைத் தல் – விரிவான வழிகாட்டி நெறிமுறைகள்  திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன.

‘‘பயனாளிகள் உறுதிமொழி” என்ற தலைப்பில் ‘‘சமத்துவபுரத்தில் குடிபுகும் நான் சமத்துவபுர சமுதாயக் கூடத்தில் வழிபாடு, திருமணம் போன்ற சடங்குகளைச் செய்துகொள்வேன். ஒவ்வொரு ஜாதிக்கும், மதத்துக்கும் பொது இடத்தில் வழிபாட்டுத் தலங்கள் தனித்தனியாக அமைத்துக் கொள்ள மாட்டேன்” என்று பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் குடியேறும் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துத் தான் குடிபுகுந்தனர்.இந்த நிலையில், அரசின் ஆணைக்கு எதிராக வழிபாட்டுக் கோவில்களைத் தங்கள் இஷ்டத்திற்கு கட்டுவது பச்சையான விதிமீறல்தான்.temple

தலைமைச் செயலாளருக்கு முறைப் படி கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது – அரசே விதி மீறல் களுக்குத் துணை போகிறது என்று பொருள். அ.இ.அ.தி.மு.க. தந்தை பெரியார் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டால் போதுமா? அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா?

முதலமைச்சராகக் கலைஞர் இருந்தபோது உருவாக்கப்பட்டது என்பதற்காக பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நோக்கத்தைச் சிதறடிப்பது எந்த வகையில் சரி? பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றா விட்டால், போராட்ட வடிவத்திலும், நீதி மன்றம் வாயிலாகவும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.