கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

சிலர் வேண்டுதல்களுக்காக திருமண மண்டபத்தில் திருமணம் செய்யாமல், புகழ் பெற்ற ஆலயங்களில் திருமணத்தை நடத்துவார்கள். உண்மையில் கோயிலில் திருமணங்கள் செய்து கொள்வதால் நிறைய நற்பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலரின் ஜாதக அமைப்பின் படியும் கோயிலில் திருமணம் செய்து வைத்தால் தான் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் திருமணத்தை வைத்துக் கொள்வது நல்லது.

வாழ்க்கை முழுவதும் நம் கூடவே வரும் துணையை ஆண்டவனின் முன்னிலையில், ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது.  அதற்காகத் தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரங்கால் மண்டபங்களையும் ஆலயங்களில் கட்டி வைத்தனர்.
மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது. அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பார்கள். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.மேலும், கோயிலில் வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும். எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

இறைபக்தியோடு, லட்சக்கணக்கில் மண்டபத்தின் வாடகைக்காக பணத்தைச் செலவழித்து, உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து, ‘சரியாக கவனிக்கவில்லை’ என்கிற அவப்பெயரையும் சுமப்பதற்கு பதிலாக, ஆடம்பரமாக செலவு செய்து நடத்தும் திருமணங்களைத் தவிர்த்து விட்டு, எளிமையாக உங்கள் மனதுக்குப் பிடித்த கடவுளின் ஆலயங்களில் திருமணத்தை நடத்துங்கள். மீதமாகும் மண்டபத்தின் செலவு தொகையை மணமக்களின் எதிர்காலத் தேவைகளுக்கு செலவிடுங்கள்.