கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

 

கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் போது அர்ச்சகர் விபூதி, குங்குமத்துடன் சமயங்களில் கூடவே கொடுக்கும் மலர்களை என்ன செய்வது என்று பலருக்கும் குழப்பங்கள் ஏற்படுகிறது.

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் போது அர்ச்சகர் விபூதி, குங்குமத்துடன் சமயங்களில் கூடவே கொடுக்கும் மலர்களை என்ன செய்வது என்று பலருக்கும் குழப்பங்கள் ஏற்படுகிறது.

சமயங்களில் ஆண்கள், அவர்களுக்கு கொடுக்கப்படும் மலர்களை என்ன செய்வது எனத் தெரியாமல் பயபக்தியுடன் வாங்கிக் கொண்டு, அதன் பின்னர் பிரகாரங்களின் சுற்று சுவர்களில் வைத்துச் செல்வதைப் பார்க்கலாம். இன்னும் சிலரோ… கைக்கு கிடைக்கும் விபூதி, குங்குமத்தை வைத்து பிரகாரம் சுற்றி வரும் போது இருக்கும் சுவர்களுக்கு வெள்ளையடித்து, குங்கும கலர் பூசி செல்வார்கள். இவை அனைத்துமே தவறு தான்.

கோயிலில் கொடுக்கும் மலர்

கோயில்களில் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அனைத்துமே பிரசாதங்களாக கருதப்பட்டு நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் என்றால் அழுக்கற்றது, தூய்மையானது என்று பொருள். அப்படி கிடைக்கும் பொருட்களில் இறைவனின் அருட் சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்க கூடாது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியில் வைத்துக் கொண்டால் அந்த இறையருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும்.

கோயிலில் கொடுக்கும் மலர்

பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்து விடல் வேண்டும்.வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்கு வேறு மலர்களை சார்த்துவது சிறந்தது.