கோயம்பேட்டில் செயல்பட்டுவந்த பூ மற்றும் பழச்சந்தை மாதவரத்திற்கு மாற்றம்

 

கோயம்பேட்டில் செயல்பட்டுவந்த பூ மற்றும் பழச்சந்தை மாதவரத்திற்கு மாற்றம்

சென்னை கோயம்பேட்டில் நேற்று இரண்டுபேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நடமாடும் வாகனத்தின் மூலம்  கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்குகொரோனா பரிசோதனை  செய்யபட்டு வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் நேற்று இரண்டுபேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நடமாடும் வாகனத்தின் மூலம்  கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்குகொரோனா பரிசோதனை  செய்யபட்டு வருகின்றனர். இன்று பூமார்க்கெட்டில்  ஒரு வியாபாரிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பூமார்க்கெட்டில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாகனத்தின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. மதியம் 2 மணியளவில் பூமார்க்கெட் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இங்குள்ள பூ மார்க்கெட் மாதாவரத்தில் தொடர்ந்து செயல்பட என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகள் 1-ஆம் தேதி முதல் மூடப்படும் என  பழக்கடை சங்கம்  முடிவு எடுத்துள்ளன. சென்னையில் கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும் என சிஎம்டிஏ உறுப்பினர் மற்றும் செயலாளருமான கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

ttn

ஏற்கனவே சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில், தினந்தோறும் நூற்றுக் கணக்கானோர் வந்து செல்லும் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டது சென்னை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏனெனில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அதனால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் சவாலான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.