கோயம்பேடு வாலிபர் மரணம்; விடுதலை செய்யப்பட்டார் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா?!..

 

கோயம்பேடு வாலிபர் மரணம்; விடுதலை செய்யப்பட்டார் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா?!..

பிரான்சிஸ் கிருபாவின் எழுத்துகளை நேசித்தவர்கள், அந்த மரணத்துக்கு பிரான்சிஸ் காரணமாக இருக்கமாட்டார் என சமூக வலைதளங்களில் நம்பிக்கையுடன் பதிவு செய்து வந்தனர். சிறிது நேரத்திலேயே செய்திகள் மாறி வரத்துவங்கியது

தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் பிரான்சிஸ் கிருபா, போதை பழக்கத்தால் தடம் மாறி செல்கிறார் என அவரது நெருங்கிய வட்டாரம் சில காலம் கிசுகிசுத்து வந்தன. திடீரென எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலை வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார் என்ற செய்திகள் முன்னணி பத்திரிகை சிலவற்றில் வெளிவரத் துவங்கின.

francis

கோயம்பேடு மார்கெட் பகுதியில், பிரான்சிஸ் கிருபா ஒரு நபரை கொலை செய்துவிட்டதாகவும், கஞ்சா போதையில், குடி போதையில் இதனை செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். பிரான்சிஸ் கிருபாவின் எழுத்துகளை நேசித்தவர்கள், அந்த மரணத்துக்கு பிரான்சிஸ் காரணமாக இருக்கமாட்டார் என சமூக வலைதளங்களில் நம்பிக்கையுடன் பதிவு செய்து வந்தனர். சிறிது நேரத்திலேயே செய்திகள் மாறி வரத்துவங்கியது. வலிப்பு நோயால் அவதிப்பட்டவருக்கு பிரான்சிஸ் கிருபா உதவி செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆராய்ந்து வருவதாக கூறப்பட்டது.

kiruba

கோயம்பேட்டில் இறந்த நபர் அருகே பிரான்சிஸ் கிருபா இருந்ததால், அவரை காவல்துறையினர் சந்தேகப்பட்டு கைது செய்திருக்கின்றனர். இறந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், அந்த நபர் மாரடைப்பால் இறந்த தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பிரான்சிஸ் கிருபா விடுதலை செய்யப்பட்டார். இவர் 2008-இல் சுந்தரராமசாமி விருதும், 2017-இல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். `கன்னி’ என்ற புதினத்திற்காக 2007-ஆன் ஆண்டு ஆனந்த விகடன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.