கோயம்பேடு மூடலால் கத்தரிக்காயை ஏரியில் கொட்டிய விவசாயிகள்! 

 

கோயம்பேடு மூடலால் கத்தரிக்காயை ஏரியில் கொட்டிய விவசாயிகள்! 

கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் சென்னைக்கு அனுப்ப பறித்து வைத்திருந்த கத்தரிக்காய்கள் அனைத்தையும் விவசாயிகள் அரூர் ஏரிப் பகுதியில் வீசிச் சென்றது வேதனையை ஏற்படுத்தியது.

கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் சென்னைக்கு அனுப்ப பறித்து வைத்திருந்த கத்தரிக்காய்கள் அனைத்தையும் விவசாயிகள் அரூர் ஏரிப் பகுதியில் வீசிச் சென்றது வேதனையை ஏற்படுத்தியது.
சென்னையில் கொரோனா பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணம் என்று கூறி அதை இடம் மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், வியாபாரிகள் தங்கள் தரப்பு கருத்தைக் கேட்கவில்லை என்று கூறி கடைகளை மூடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னைக்கு காய்கறிகளை அனுப்ப முடியாமல் பறித்து வைத்த காய்கறிகளை என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள், இடைத்தரகர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் சித்தேரி, வள்ளி மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கத்தரிக்காய், தக்காளி, சுரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய் உள்ளிட்டவை வீணாகி வருகின்றன. 

brinjal-dumoed-78

அரூர் பகுதியில் அதிக அளவில் கத்தரிக்காய் விளைவிக்கப்படுகிறது. கத்தரிக்காய் விளைந்து விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவாசயிகள் உள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயிகள், அறுவடை செய்து டிராக்டரில் வைத்திருந்த ஒரு டன் கத்தரிக்காயை அரூர் பெரிய ஏரிப் பகுதியில் கொட்டிச் சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விவசாயிகள் கொட்டிச் சென்ற கத்தரிக்காயை பலரும் எடுத்துச் சென்றது வேதனையை அதிகரித்தது.