கோயம்பேடு மார்க்கெட் பூ வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதி!.. சந்தையை மூடும் அபாயம்?!

 

கோயம்பேடு மார்க்கெட் பூ வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதி!.. சந்தையை மூடும் அபாயம்?!

கோயம்பேடு மார்க்கெட்டில், மக்கள் கூட்டம் அதிகமாக கூடக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்படைந்த பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், மக்கள் கூட்டம் அதிகமாக கூடக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ttn

இதனிடையே சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட உடன், காய்கறிகளை வாங்கி சேமித்துக் கொள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதன் விளைவாக நேற்று கோயம்பேடு சந்தை வியாபாரிகள் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அங்கு பூ வியாபாரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ttn

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்னும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், சந்தையை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார். தற்போது இன்னொருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சந்தை மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.