கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!

 

கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!

எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக பெருந்தொற்றாக உருவெடுத்தது. கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக சந்தை தொடங்கப்பட்டது. அதே போன்று எம்.ஜி.ஆர் நகரிலும் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. 

ttn

இதனையடுத்து அந்த வியாபரிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் வேலை செய்யும் 150 வியாபாரிகள் என அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும், அந்த நபர்களின் குடும்பத்தினரையும் தனிமை படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பரவியது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது எம்.ஜி.ஆர் நகர் சந்தையிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னைவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.