கோயம்பேடு மார்க்கெட்டில் நடமாடும் கொரோனா மாதிரி சேகரிப்பு வாகனம் இயக்கம்!

 

கோயம்பேடு மார்க்கெட்டில் நடமாடும் கொரோனா மாதிரி சேகரிப்பு வாகனம் இயக்கம்!

நூற்றுக் கணக்கானோர் வந்து செல்லும் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டது சென்னை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பல பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இங்கிருந்தே பல சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து  இன்னும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ttn

ஏற்கனவே சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில், தினந்தோறும் நூற்றுக் கணக்கானோர் வந்து செல்லும் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டது சென்னை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏனெனில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அதனால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் சவாலான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளவர்களின் உடல் நிலையை ஆய்வு செய்யும் பணியும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு கொரோனா இருக்கிறதா என பரிசோதிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. மேலும், நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா சேகரிப்பு  கொரோனா கண்டறிவதற்கான மாதிரிகளையும் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.