கோயம்பேடு சந்தையில் மேலும் ஒரு வியாபாரிக்கு கொரோனா உறுதி!

 

கோயம்பேடு சந்தையில் மேலும் ஒரு வியாபாரிக்கு கொரோனா உறுதி!

குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான கோயம்பேடு சந்தையிலும் கொரோனா பரவியது சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2100ஐ கடந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னையில், 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான கோயம்பேடு சந்தையிலும் கொரோனா பரவியது சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ttn

இரண்டு நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு சந்தையில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று, நெற்குன்றத்தை சேர்ந்த 64 வயதான வியாபாரிக்கும்,  மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த 26 வயது நபருக்கும் கோயம்பேடு சந்தை H பிளாக்கில் காய்கறி மொத்த விற்பனை செய்து வந்தவருக்கும் கொரோனா வைரஸ் பரவியது உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டது, இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.