கோயம்புத்தூருக்கு 2,500, திருநெல்வேலிக்கு 2000, தூத்துக்குடிக்கு 1,800 – ஆம்னி பேருந்து கட்டணம்!

 

கோயம்புத்தூருக்கு 2,500, திருநெல்வேலிக்கு 2000, தூத்துக்குடிக்கு 1,800 – ஆம்னி பேருந்து கட்டணம்!

சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமான டிக்கெட் 2300 கிடைக்கிறது. ஆனால், ஏசி ஆம்னி பேருந்தில் கன்னியாகுமரி செல்லவேண்டுமென்றால் 2500. சாதாரண பேருந்து என்றால் ஜஸ்ட் 1900 மட்டுமே. திருநெல்வேலிக்கு 2000, தூத்துக்குடிக்கு 1800, மதுரைக்கு 1600, கோயம்புத்தூருக்கு 2500 ரூபாயும், ஈரோட்டிற்கு 1700, திருச்சிக்கு 1800.

தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு விடுமுறை வருவதால் தூத்துக்குடிக்கு செல்ல, சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்துகள் வளாகத்திற்கு வருகிறார் பயணி ஒருவர். தூத்துக்குடிக்கு ஒரு டிக்கெட் வெள்ளிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு என அங்கிருந்த ஒரு நிறுவனத்திடம் விலை கேட்க, 1800 என அவர் சொல்கிறார். வந்தவரோ, ‘அய்யய்யோ நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க, நான் ஃபிளைட்ல போக கேட்கல, நமக்கு கட்டுப்படியாகாது, பஸ்ல தாங்க கேட்டேன்” என்க, கவுண்ட்டரில் இருந்த ஊழியரோ, பஸ்லதாங்க 1800 என்றிருக்கிறார். வந்தவர் பேயறைந்ததுபோல் மாறி, விடுமுறைக்கு ஊருக்குச் சென்று உறவுகளை சந்திக்கும் எண்ணத்தையே விட்டிருப்பார் என சொல்லவும் வேண்டுமா என்ன?

Omni bues charge heavily

சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமான டிக்கெட் 2300 கிடைக்கிறது. ஆனால், ஏசி ஆம்னி பேருந்தில் கன்னியாகுமரி செல்லவேண்டுமென்றால் 2500. சாதாரண பேருந்து என்றால் ஜஸ்ட் 1900 மட்டுமே. திருநெல்வேலிக்கு 2000, தூத்துக்குடிக்கு 1800, மதுரைக்கு 1600, கோயம்புத்தூருக்கு 2500 ரூபாயும், ஈரோட்டிற்கு 1700, திருச்சிக்கு 1800. அநியாயமா இருக்கே என்றால், சென்னையிலிருந்து அடுத்த ஸ்டாப்பிங்கான விழுப்புரத்திற்கு 1500 ரூபாயாம். வினாயகர் சதுர்த்திக்கே இப்படி என்றால், தீபாவளிக்கு 5,000 வரைக்கும் போனால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை!