கோமாவுக்கு சென்ற 5 வயது சிறுவன்: சேலம் அரசு மருத்துவமனை மீது தந்தை புகார்!

 

கோமாவுக்கு சென்ற 5 வயது சிறுவன்: சேலம் அரசு மருத்துவமனை மீது தந்தை புகார்!

குழந்தையை பெங்களூர் அழைத்து சென்று காப்பாற்றியதாகவும், இருப்பினும்  குழந்தை தற்போது கோமா நிலைக்கு சென்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம்:  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் கோமா நிலைக்கு சென்றது சேலம் அரசு மருத்துவமனையின் கவன குறைவால் தான் என்று குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவருக்கு மைதிலி என்ற மனைவியும் ஹரிகுகன் என்ற   ஐந்து வயது குழந்தையும் உள்ளனர்.  கடந்த செப்டம்பர் மாதம் காய்ச்சல் ஏற்பட்டதாலும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

salem

இருப்பினும் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை இன்றி இருந்ததால் சிறுவனின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் குழந்தையை பெங்களூர் அழைத்து சென்று காப்பாற்றியதாகவும், இருப்பினும்  குழந்தை தற்போது கோமா நிலைக்கு சென்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஹரிகுகனின் தந்தை மணிகண்டன், தனது குடும்பத்துடன் வந்து நேற்று சேலம் ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘ தனது மகன் கோமா நிலைக்கு செல்ல சேலம் அரசு மருத்துவமனையின் முறையற்ற சிகிச்சையே காரணம் என்று புகார் கூறியுள்ளார்.   குழந்தையின் அடுத்த கட்ட சிகிச்சைக்கு உரிய வசதி இல்லை. எனவே மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.