கோமாளி ட்ரெய்லர் விவகாரம் – ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் சப்போர்ட்

 

கோமாளி ட்ரெய்லர் விவகாரம் – ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் சப்போர்ட்

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள்வரும்போது
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது
#விடு தலைவா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்
என ரஜினிக்கு ஆதரவாக ட்வீட்டியிருக்கிறார்.

படத்துக்குப் பேர்தான் கோமாளி, ஆனால் தான் ஒரு சீக்காளி இல்ல, ஷோக்காலி என்பதை ஒரே ஒரு ட்ரெய்லர் மூலம் நிரூபித்துவிட்டார் கோமாளி பட இயக்குநர். இருபது வருடங்களாக ரஜினி நீட்டி முழுக்கி வந்ததை, இரண்டு நிமிட ட்ரெய்லரை வெளியிட்டு நாசம் பண்ணிட்டார். அத்திவரதரை பார்க்காதவர்கள்கூட இருக்கலாம், ஆனால் கோமாளி பட ட்ரெய்லரை பார்க்காதவர்களும் உண்டோ? ட்ரெய்லர் வெளியிட்டதிலிருந்து ரஜினிக்கு ஆதரவாகவும், ட்ரெய்லருக்கு ஆதரவாகவும் எல்லா மட்டத்திலிருந்தும் எல்லாவகையான மிக்ஸ்ட் விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கமல்கூட ட்ரெய்லர் குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.

Raghava Lawrence tweet

லேட்டஸ்டாக ரஜினியின் அதிதீவிர ரசிகரான நடிகர் லாரன்ஸ் களத்தில் குதித்திருக்கிறார்.  அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு,
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு,
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள்வரும்போது
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது
#விடு தலைவா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்
என ரஜினிக்கு ஆதரவாக ட்வீட்டியிருக்கிறார். நாங்களும் ஒரு காலத்துல இப்புடி கம்பு சுத்துனவங்கதான் மாஸ்டர். அப்பயெல்லாம் ரஜினி பேரைச் சொன்னா, முதலமைச்சர்களே யோசித்துத்தான் பதில் பேசுவாங்க. இப்பந்தான் முந்தாநாளு பால்குடி மறந்த பசங்க எல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு ஆகிட்டாரு!