கோமாளியாக புதிய அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி!

 

கோமாளியாக புதிய அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவியின் 24வது படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் 24வது படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அடங்கமறு. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  புதுமுக இயக்குநர் பிரதீப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வந்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இதில் யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் நேற்று மாலை ட்விட்டரில் வெளியானது. இந்தப்படத்திற்குக் கோமாளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி சர்க்கஸ் கோமாளி உள்ளிட்ட 9 கெட் அப்களில் தோன்ற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. 

இதையடுத்து ஜெயம் ரவி மகிழ் திருமேணி, செல்வராகவன், ஹரி மற்றும் அகமது ஆகியோரின் படங்களில் வரிசையாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.