கோமாளித்தனமான அறிவிப்புகளை வெளியிடுகிறார் எடப்பாடி | கொந்தளிப்பில் – ஆ.ராசா !

கோமாளித்தனமான அறிவிப்புகளை வெளியிடுகிறார் எடப்பாடி | கொந்தளிப்பில் – ஆ.ராசா !

நீலகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.  520 இடங்களில் மண்சரிவு, 40க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பிற பகுதியிலிருந்து நீலகிரி மாவட்டம் துண்டிக்கப்பட்டது. இந்த வெள்ள பாதிப்புகளை கடந்த ஒருவார காலமாக நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார் நீலகிரி மக்களவை எம்.பி ஆ.ராசா.

மழை வெள்ளத்தால், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அறிக்கை ஒன்றையும் தயாரித்துள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யாவிடம் அந்த அறிக்கையை வழங்கினார் ஆ.ராசா. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த ஆ.ராசா, “நீலகிரியில் மிகப்பெரிய கனமழை பெய்யும் என கடந்த 6ம் தேதி வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஆனால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காததால் நீலகிரி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி அறிந்த உடன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மக்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் போது, கண் துடைப்புக்காக வந்து சென்றிருக்கிறார் ஓ.பி.எஸ். நீலகிரியில் இன்னும் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி முடிவடையாத நிலையில், 200 கோடி ரூபாய் மட்டுமே நிவாரண்ப் பணிகளுக்குத் தேவை என துணை முதல்வர் முடிவுக்கு வந்தது கோமாளித் தனமான செயல்.” எனத் தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்.

மேலும் பேசிய அவர் ”நீலகிரி வெள்ள நிவாரண நிதியாக 30 கோடி ரூபாயை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது. கேரள, கர்நாடக மாநிலங்களிலும் மழையால் வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இரு மாநில முதல்வர்களும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, மேட்டூருக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்தது போல், போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். நீலகிரியில் ஏற்பட்ட சேதங்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாக பார்வையிடாமல், நீலகிரி மக்களைக் கொச்சைப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி .
இந்த மழையால் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எந்த பணிகளும் முறையாக மேற்கொள்ளாமல் அ.தி.மு.க அரசு இயந்திரம் செயல் இழந்து நிற்கிறது. ஐந்து நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பணிகளை மேற்கொள்ளும்போது மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை அளிக்கவில்லை. தாசில்தார், வி.ஏ.ஓ அளவிலான அதிகாரிகளைக் கூட என்னுடன் நிவாரண பணிகளை ஆய்வு மேற்கொள்ள அனுப்பவில்லை. நீலகிரியில் 500 கோடி அளவிற்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு 1.9 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்றார் எம்.பி. ஆ.ராசா.