கோப்ரா போஸ்ட் #OperationKaraoke: மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பணம் வாங்கிய 36 பாலிவுட் பிரபலங்கள்

 

கோப்ரா போஸ்ட் #OperationKaraoke: மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பணம் வாங்கிய 36 பாலிவுட் பிரபலங்கள்

மக்களவை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய 36 பாலிவுட் பிரபலங்கள் பணம் பெற்றிருப்பதாக கோப்ரா போஸ்ட் எனும் புலனாய்வு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மும்பை: மக்களவை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய 36 பாலிவுட் பிரபலங்கள் பணம் பெற்றிருப்பதாக கோப்ரா போஸ்ட் எனும் புலனாய்வு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு சமூக வலைதளங்களின் மூலம் பிரச்சாரம் செய்ய 36 பாலிவுட் பிரபலங்கள் பணம் பெற்றிருப்பதாக கோப்ரா போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நடிகர்கள், பாடகர்கள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களை பலரும் பின் தொடர்கின்றனர். இவர்களை தங்கள் அரசியல் ஆயாதத்துக்காக பயன்படுத்திக் கொள்ள பல கட்சிகள் செயல்பட்டு வருகிறதென கோப்ரா போஸ்ட் பதிவு செய்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய ரூ. 2 லட்சம் முதல் ரூ. 50  லட்சம் வரை பாலிவுட் பிரபலங்களிடம் டீல் பேசப்பட்டுள்ளது.

 #OperationKaraoke என்ற பெயரில் இதுகுறித்த ஆதாரங்களை கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகர்களான விவேக் ஓபராய், ஜாக்கி ஷரோப், அமிஷா படேல், சன்னி லியோன், பூணம் பாண்டே உள்ளிட்ட பலரும் பணம் பெற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்ய ஒப்புதல் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஓட்டுகள் விற்பனைக்கல்ல என பலரும் வலியுறுத்தி வரும் வேளையில், பிரபலங்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பேட்டியளிப்பது, சமூக வலைதளங்களில் பதிவு செய்வது என பல்வேறு வகைகளில் தாங்கள் பணம் பெற்ற கட்சிகளுக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் பாலிவுட் விற்பனைக்கு ( #BikaooBollywood ) எனும் ஹாஷ்டாக்கை டிரெண்ட் செய்தனர். அதேபோல் வித்யா பாலன், அர்ஷாத் வர்சி உள்ளிட்ட சில நடிகர்கள் பணம் வாங்கி பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டதாக கோப்ரா போஸ்ட் தகவல் தெரிவித்தது. இதற்கு அந்நடிகர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.