கோபே பிரையன்ட் மறைவுக்கு சச்சின், விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் இரங்கல்

 

கோபே பிரையன்ட் மறைவுக்கு சச்சின், விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் இரங்கல்

முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் மறைவுக்கு சச்சின், விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மும்பை: முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் மறைவுக்கு சச்சின், விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரையன்ட் கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தனது மகள் ஜியானாவை போட்டியில் பங்கேற்க வைக்க ஹெலிகாப்டரில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் கோபே பிரையன்ட் (41), ஜியானா (13) உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், கோபே பிரையன்ட் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ttn

விராட் கோலி: “கோபே இறந்த செய்தி மனதை பாழாக்கி விட்டது. மகளுடன் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த செய்தி மனதை உடைத்து விட்டது. நான் சிறிய பையனாக இருந்தபோது கோபே விளையாட்டு களத்தில் நிகழ்த்தும் சாகசங்களை பார்த்த விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை கணிக்க முடியாததாகவும், நிலையற்றதாகவும் உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!”

ttn

சச்சின் தெண்டுல்கர்: “கோபே பிரையன்ட் மற்றும் அவரது மகள் உட்பட சிலர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்”.

கால்பந்து பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ: “கோபே மற்றும் அவரது மகள் இறந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. பலருக்கும் உத்வேகம் அளித்த அவர் ஒரு சகாப்தம் ஆவார். இந்த விபத்தில் பலியான அனைவரது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”.

ரோகித் சர்மா: “விளையாட்டு உலகிற்கு இது ஒரு மோசமான நாள். கூடைப்பந்து விளையாட்டின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவர் சீக்கிரத்தில் நம்மை விட்டு போய்விட்டார். கோபே பிரையன்ட், அவரது மகள் மற்றும் விபத்தில் உயிரிழந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடையட்டும்”

மேலும் கிரிக்கெட் பிரபலங்களான ஷேன் வார்னே, ரபடா, விவியன் ரிச்சர்ட்ஸ், ஷோயப் அக்தர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், முகமது கைஃப், டேரன் சேமி, அஸ்வின், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் கோபே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.