கோபே பிரையன்ட் சென்ற ஹெலிகாப்டரின் தூள்,தூளாக நொறுங்கிய பாகங்கள் – வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளே

 

கோபே பிரையன்ட்  சென்ற ஹெலிகாப்டரின் தூள்,தூளாக நொறுங்கிய பாகங்கள் – வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளே

பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரையன்ட் சென்ற ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரையன்ட் சென்ற ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரையன்ட் கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தனது மகள் ஜியானாவை போட்டியில் பங்கேற்க வைக்க ஹெலிகாப்டரில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் கரடுமுரடான மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் இந்த மலைப்பகுதி உள்ளது. இந்த விபத்தில் கோபே பிரையன்ட் (41), ஜியானா (13) உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் விபத்தில் பலியானோருக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ttn

இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை ஆராயும் முயற்சியில் அமெரிக்க போலீசார் ஈடுபட்டுள்ளனர். பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ttn

தற்போது விபத்து நடந்த இடத்தின் காட்சியை அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் பறக்கும் கேமரா மூலம் எடுத்து வெளியிட்டுள்ளது.

ttn

பலியானவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். சிலரின் உடல்கள் மீட்கப்பட்டாலும் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.