“கோபம் கொள்ளாதீர்கள்…முகத்தில் புன்னகை தவழட்டும்!” – உலகின் அதிக வயது கொண்ட மனிதரின் அட்வைஸ்

 

“கோபம் கொள்ளாதீர்கள்…முகத்தில் புன்னகை தவழட்டும்!” – உலகின் அதிக வயது கொண்ட மனிதரின் அட்வைஸ்

தற்போது உலகில் வாழ்ந்து வரும் மனிதர்களிலேயே அதிக வயதுடைய மனிதர் நீண்டநாள் உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை பற்றி கூறியுள்ளார்.

டோக்கியோ: தற்போது உலகில் வாழ்ந்து வரும் மனிதர்களிலேயே அதிக வயதுடைய மனிதர் நீண்டநாள் உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை பற்றி கூறியுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த கிரின்னிங் சிட்டெட்சு வாட்டனப் என்ற முன்னாள் விவசாயிக்கு தற்போது வயது 112 வருடங்கள் 344 நாட்களாகும். இவர் கடந்த 1907-ஆம் ஆண்டு பிறந்தார். இன்னும் சில தினங்களில் இவர் 113 வயதை நிறைவு செய்ய உள்ளார். அந்த வகையில் இவர்தான் தற்போது உலகில் வாழ்ந்து வரும் மனிதர்களிலேயே மிகவும் வயதான மனிதர். அதற்காக கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் கிரின்னிங் வாட்டனப்புக்கு வழங்கப்பட்டது. அப்போது நீண்ட வருடங்கள் உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை அவர் கூறினார்.

ttn

அந்த வகையில், எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் கோபம் கொள்ள கூடாது. எப்போதும் முகத்தில் புன்னகை தவழ வேண்டும் என்றார். இதையே கிரின்னிங் வாட்டனப்பின் உறவினரும் ஆமோதித்துள்ளார். ஒருநாளும் கிரின்னிங் வாட்டனப் கோபம் கொண்டதாக தங்களுக்கு நினைவில்லை எனவும்,  எப்போதும் சிரித்துக் கொண்டேதான் இருப்பார் எனவும் கிரின்னிங் வாட்டனப்பின் உறவினர் தெரிவித்தார்.