கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் போட்டுக் கொடுத்தேனா? – அமீர் கான் விளக்கம்

 

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் போட்டுக் கொடுத்தேனா? – அமீர் கான் விளக்கம்

சமூக ஊடகங்களில் ஒரு வாரமாக வதந்தி ஒன்று வைரலாக பகிரப்பட்டு வந்தது. அதில், டெல்லியில் ஏழைகள் வாழும் பகுதிக்கு கோதுமை மாவு பாக்கெட் உடன் வண்டி ஒன்று வந்தது. இரவு நேரம் என்பதாலும் மக்கள் அதிகமாக இருப்பதாலும் ஒருவருக்கு ஒரு கிலோ பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் போட்டுக் கொடுத்தது நான் இல்லை என்று அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு வாரமாக வதந்தி ஒன்று வைரலாக பகிரப்பட்டு வந்தது. அதில், டெல்லியில் ஏழைகள் வாழும் பகுதிக்கு கோதுமை மாவு பாக்கெட் உடன் வண்டி ஒன்று வந்தது. இரவு நேரம் என்பதாலும் மக்கள் அதிகமாக இருப்பதாலும் ஒருவருக்கு ஒரு கிலோ பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், பணக்காரர்கள், நடுத்தர மக்கள் இந்த மாவு பாக்கெட்டை வாங்க வரவில்லை. ஏழைகள் மட்டுமே இந்த பாக்கெட் வாங்கிச் சென்றனர். அடுத்த நாள் காலையில் மாவு பாக்கெட்டை திறந்து பார்த்தபோது அதில் ஒவ்வொன்றிலும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இந்த பணத்தை வழங்கியது நடிகர் அமீர் கான் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வந்தனர்.

15-k-amir

இது தொடர்பாக அமீர்கானிடம் ஊடகங்கள் தரப்பில் விளக்கம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அமீர்கான் தரப்பில் யாரும் பேசவில்லை. இதனால் இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பலரும் இதை ஷேர் செய்தனர்.

இந்த நிலையில், இந்த தகவலை அமீர்கான் இன்று மறுத்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கோதுமை மாவு பாக்கெட்டில் பணத்தைப் போட்டுக் கொடுத்த நபர் நான் இல்லை. இது முழுக்க பொய்யான தகவலாக இருக்கலாம். அல்லது, தன்னுடைய பெயர் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வேறு யாராவது ராபின்உட் போல செயல்பட்டிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.