கோதாவரி, ஆஸ்ட்ராய்ட் வருது அண்டாவை எடுத்து வை

 

கோதாவரி, ஆஸ்ட்ராய்ட் வருது அண்டாவை எடுத்து வை

ஏப்ரல் 13, 2029 எல்லாரும் அவங்கவங்க கேலண்டர்ல குறிச்சு வச்சுக்கங்க. இன்னும் பத்து வருஷம் கழிச்சு அப்படி என்ன பிரமாதமா நடக்க போகுதுன்னு கேட்குறவங்களுக்கு: அப்போஃபிஸ் அப்டீன்னு ஒரு விண்கல், இல்ல ஆஸ்ட்ராய்ட், இல்ல விண்கல்லே இருக்கட்டும், பூமிக்கு ரொம்ப பக்கத்துல வரப்போகுது.

ஏப்ரல் 13, 2029 எல்லாரும் அவங்கவங்க கேலண்டர்ல குறிச்சு வச்சுக்கங்க. இன்னும் பத்து வருஷம் கழிச்சு அப்படி என்ன பிரமாதமா நடக்க போகுதுன்னு கேட்குறவங்களுக்கு: அப்போஃபிஸ் அப்டீன்னு ஒரு விண்கல், இல்ல ஆஸ்ட்ராய்ட், இல்ல விண்கல்லே இருக்கட்டும், பூமிக்கு ரொம்ப பக்கத்துல வரப்போகுது. ரொம்ப பக்கம்னா கைக்கு எட்டும் தூரம் இல்ல, ஜஸ்ட் ஒரு 19,000 மைல் தொலைவுல வந்துட்டு போகப்போகுது.

asteroid

அடாடாடா, இந்த‌ டெக்னாலஜி டெவலப் ஆனதும் போதும், மாசத்துக்கு ஒரு தடவை விண்கல் வருது விண்மீன் வருதுன்னு பொரளி கெளம்பிகிட்டே இருக்குதுன்னு அலுத்துக்க வேண்டாம். ஏன்னா, இந்த அஸ்ட்ராய்ட் 19,000 மைல்கள் தூரத்துல வந்து ஹாய் சொன்னாலும் சொல்லலாம், இல்லேன்னா அப்டியே லெஃப்ட்ல இன்டிகேட்டர் போட்டு ரைட்ல ஒரு கட் அடிச்சு பூமி மேல மோதவும் செய்யலாம்னு, அப்போஃபிஸோட பாதையை கணிச்சு வச்சிருக்குற விஞ்ஞானிகள் சொல்றாங்க. பயப்படாதீங்க. அப்போஃபிஸ் பூமிக்கு ஹாய் மட்டும் சொல்லுதா இல்ல, ஒரேயடியா குட் பை சொல்லுதாங்கிறதை இன்னும் பத்து வருஷம் கழிச்சு தெரிஞ்சுக்கலாம். அது கெடக்குது, இந்த அப்போஃபிஸ் பூமி  மேல மோதுறதுக்குள்ள‌ ரஜினி அரசியலுக்கு வந்திடுவாரான்னு கேட்குறவன் ரத்தம் கக்கிச் சாவான்.

asteroid

கிட்டத்தட்ட மூணு கால்பந்து மைதானம் அளவுள்ள இந்த அப்போஃபிஸ் பூமி மேல மோத வேண்டி வந்தா, என்ன பண்ணலாம்னு நாசா இப்பவே முன்னெச்சரிக்கைக்கான‌ ஆராய்ச்சியை துவக்கி இருக்காங்க. நம்மளால ஆராய்ச்சிகெல்லாம் செலவு செய்ய முடியாது. வேணும்னா, ஒரு அண்டாவை எடுத்து கவுத்து போட்டு அது மேல உட்கார்ந்துகிட்டு, அப்போஃபிஸ் பாதை மாறணும்னு மந்திரம் மட்டும்தான் சொல்ல முடியும். என்ன நக்கலான்னு கேட்காதீங்க. காந்தி வேணுமா இல்ல கோட்சே வேணுமான்னு கேட்டா, முன்னாடி எல்லாம் சன்னமா கோட்சேன்னு கேட்கும், ஆனா இப்ப கோட்சேதான் வேணும்னு சத்தமா கேட்குது. இந்த லட்சணத்துல நாடு இருக்குறப்போ, அப்போஃபிஸ் வந்து மோதுனாதான் என்ன தப்புங்குறேன்.