கோட் சூட் அணிந்தது ஏன்? சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமி விளக்கம்!

 

கோட் சூட் அணிந்தது ஏன்? சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமி  விளக்கம்!

13 நாள்களில் 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை வந்தடைந்தார். 

edappadi

வெளிநாட்டு முதலீட்டாளர்களைக்  கவர முதல்வர் எடப்பாடி பழனிசாமி , இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் 13 நாட்களுக்குப் பிறகு இன்று சென்னை திரும்பினார். அவரை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். 

edappadi

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  13 நாள்களில் 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.  சேலத்தில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்படும்’ என்றார். 

edappadi

தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டவர்களை அவர்களின் உடையில் சென்று சந்தித்தால்தான் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதால் கோட் சூட் அணிந்தேன் தமிழகத்தை மேம்படுத்தவே சுற்றுப்பயணம் சென்றேன். இனிவரும் காலங்களிலும் சுற்றுப்பயணம் செல்வேன்’ என்றார்.