கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவல் குறையுமா? : பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவு வெளியீடு

 

கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவல் குறையுமா? : பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவு வெளியீடு

பருவ நிலை மாற்றம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருமா என்பது பற்றி பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு செய்துள்ளது.

வாஷிங்டன்: பருவ நிலை மாற்றம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருமா என்பது பற்றி பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு செய்துள்ளது.

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் கோடை வெயிலால் ஏற்படும் அதிக வெப்பநிலையானது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ttn

கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட பல புள்ளிவிவர ஆய்வுகளில் காலநிலைக்கும், கொரோனா வைரஸ்க்கும் இடையே தொடர்பை காட்டியுள்ளன. அதிக வெப்பநிலையில் கொரோனா பரவாது என்று முன்னர் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த ஆய்வுகளின் முடிவுகளை பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு முற்றிலுமாக மறுக்கவில்லை. வெப்பநிலையால் கொரோனாவின் தாக்கம் குறைவது மிகவும் சுமாரான அளவிலேயே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.