கோடை காலத்தில் 30% கரெண்ட் பில்லை மிச்சம் செய்ய எளிய வழி?!..

 

கோடை காலத்தில் 30% கரெண்ட் பில்லை மிச்சம் செய்ய எளிய வழி?!..

கோடைக் காலம் வந்தாலே பேன், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற மின்சாதனங்களின் தேவை அதிகரிக்கும், கூடவே கடெண்ட் பில்லும் எகிறிவிடும். கோடைக்காலம் என்றாலே குடும்பஸ்தர்களுக்கு கரெண்ட் பில் பற்றிய கவலையும் தொற்றிக்கொள்ளும்.

ஏப்ரல் மாதம் அதிக வெப்பத்தோடு துவங்கி, இன்னும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 35 முதல் 39 டிகிரி வெப்பம் பெரும்பான்மையாக பதிவாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ZvV

கோடைக் காலம் வந்தாலே பேன், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற மின்சாதனங்களின் தேவை அதிகரிக்கும், கூடவே கடெண்ட் பில்லும் எகிறிவிடும். கோடைக்காலம் என்றாலே குடும்பஸ்தர்களுக்கு கரெண்ட் பில் பற்றிய கவலையும் தொற்றிக்கொள்ளும். கரெண்ட் பில்லை 25% முதல் 30% வரை குறைக்க சில எளிய வழிகள் உள்ளது.

zcv

ஏசியின் மூலம் கரெண்ட் வீணாவதை தடுக்க

svzf

வெயில் காலத்தில் ஏசியால் மட்டுமே அதிகமான கரெண்ட் செலவாகும். ஏசியை சரியாக பராமரித்தால், இந்த பிரச்னை இருக்காது.

வெயில் காலத்தில் ஏசியை உபயோகிக்கும் முன் ஒரு சர்வீஸ் விட்டு, அனைத்து பாகங்களையும் சரிபார்த்து கொள்ளுதல் நலம். 7 அல்லது 8 வருடம் பழமையான வீட்டில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மாற்றிவிடுங்கள். அதேபோல் இன்வெர்டரோடு ஏசியை பயன்படுத்துவது சிறந்தது. #BEE 5 star ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துங்கள்.

தினசரி 8 மணி நேரம் ஓடக்கூடிய 1.5 டன் ஏசி, சாதரண மாடலாக இருந்தால் 9 யூனிட் கரெண்ட்டை எடுத்துக்கொள்ளும். ஆனால் #BEE 5 star ரேட்டிங் கொண்ட ஏசி, 7 யூனிட் கரெண்ட்டை மட்டுமே எடுத்துக்கொள்ளும். கோடை காலத்தில் நான்கு மாதம் இப்படியான ஏசியை பயன்படுத்தினால் 240 யூனிட் கரெண்ட் மிச்சமாகும், நீங்கள் ஆண்டுக்கு 1,500 ரூபாயை சேமிக்க முடியும். 

பல்ப்புகளை மாற்ற வேண்டும்

ddvv

கோடை கால வெப்பம் அதிகரிக்கும் முன் உங்கள் இல்லத்தில் உள்ள பழைய பல்ப்புகள் மற்றும் டியூப் லைட்களுக்கு பதிலாக CFL அல்லது LED-ஐ மாற்றிடுங்கள். 18 வாட் CFL, 40 வாட் டியூப் லைட்டின் வெளிச்சத்தை தரவல்லது. இதன்மூலம் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

ஃபேன்

vV

கோடை காலத்தில் பல்ப்புகளை விட ஃபேன் அதிக நேர பயன்பாட்டில் இருக்கக்கூடியது. தோராயமாக 8 மணி நேரம் பயன்படுத்தினாலும், சாதரணமான ஃபேன் ஒரு மணி நேரத்துக்கு 75 வாட்ஸ் கரெண்ட்டை எடுத்துக்கொள்ளும். இதனால் ஒரு வருடத்துக்கு 1,000 ரூபாய் செலவு. அதனால் BEE-rated அல்லது Super Efficient ஃபேன்களை பயன்படுத்துங்கள். இதன்மூலம் வருடத்திற்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

ஃப்ரிட்ஜ் பயன்பாடு

vV

வீட்டின் ஒட்டுமொத்த கரண்ட் பில்லில் 15% பங்கு வகிக்கிறது ஃப்ரிட்ஜ்களின் பயன்பாடு. ஃப்ரிட்ஜ்களை முறையான இடத்தில் வைக்க வேண்டும், சுவருக்கும் ப்ரிட்ஜுக்கும் 2 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் காற்று சுழற்சிக்கு வசதியாக இருக்கும். 

260 லிட்டர் பழைய மாடல் ஃப்ரிட்ஜ்கள் ஒரு நாளைக்கு 3.5 யூனிட் கரெண்ட்டை எடுத்துக்கொள்ளும். ஆனால்  BEE-rated ஃப்ரிட்ஜ்கள், 2 யூனிட் கரெண்ட்டை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதனால் ஆண்டுக்கு 540 யூனிட் கரெண்ட் மிச்சமாகும். இதன்மூலம் 3000 ரூபாய் சேமிக்கலாம்.

zzcvx

வீட்டில் டெஸ்க்டாப்க்கு பதிலாக லேப்டாப் பயன்படுத்துங்கள். டெஸ்க்டாப் ஆண்டுக்கு 4,000 ரூபாய் கரெண்ட் செலவு வைக்கும். லேப்டாப் பயன்படுத்துவதன் மூலம் 2,500 ரூபாய் வரை சேமிக்க முடியும்.