கோடை காலத்தில் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 5 பழங்கள்!

 

கோடை காலத்தில் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 5 பழங்கள்!

கோடை காலத்தில் இதய ஆரோக்கியத்தையும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உணவில் அதிக பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட 5 பழங்களின் விவரம் இதோ!

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு வகையான பழங்கள் கோடை காலத்தில் கிடைக்கிறது. எடை குறைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட இரத்த அழுத்தம் மற்றும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை பழங்கள் நமக்கு தருகின்றன. அந்த வகையில் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பழங்கள் உதவுகின்றன.

கோடைக் காலத்தில் கிடைக்கும் பல பழங்கள் ஆரோக்கியமான இதயத்தை ஆதரிக்கக் கூடிய முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. கோடையில் கிடைக்கும் பெரும்பாலான பழங்களில் அதிக நீர் இருப்பதுடன் அவற்றில் அதிக நார்ச்சத்தும் அடங்கியுள்ளது. அவை இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த கோடை காலத்தில் இதய ஆரோக்கியத்தையும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உணவில் அதிக பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட 5 பழங்களின் விவரம் இதோ!

ttn

தர்ப்பூசணி:

தர்ப்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது. இதில் பொட்டாசியம், லைகோபீன் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் பல இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தர்பூசணி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தினமும் தர்பூசணி உண்பதால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.

mango

மாம்பழம்:

மாம்பழம் ஒரு கோடைக் கால பழமாகும். கோடைக் காலத்தில் பலராலும் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்று மாம்பழம். ஃபைபர், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் இருப்பதால் மாம்பழம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. பொட்டாசியத்தை அதிகரிப்பது மற்றும் சோடியம் உட்கொள்வதை குறைத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது மட்டுமில்லாமல் அது இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

ttn

பெர்ரிக்கள்:

பெர்ரி பழங்களில் வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்ட ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை இதய நோய் தொடர்பான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பெர்ரிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வகையான பெர்ரி பழங்களை சாப்பிடலாம்.

ttn

பப்பாளி:

சிறந்த தோல் ஆரோக்கியம் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை பப்பாளி பழம் நமக்கு கொடுக்கிறது. பப்பாளியில் ஃபைபர், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பப்பாளி பழத்தை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியாகவும் தயார் செய்து சாப்பிடலாம். பப்பாளிப் பழத்தில் உள்ள பப்பேன் இதயத்திற்கும் சருமத்திற்கும் நல்லது.

ttn

பீச் பழம்:

பீச் பழங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபைபர், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பல சத்துக்கள் உள்ளன. இதய ஆரோக்கியம் மட்டுமல்ல…பீச் பழமானது செரிமானம், சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.