கோடைக்கால ஸ்பெஷல்: 2 வாழைத்தண்டு போல உடம்பு வேண்டுமா? அதற்கு வழிகாட்டியும் அதுவே தான்!

 

கோடைக்கால ஸ்பெஷல்: 2 வாழைத்தண்டு போல உடம்பு வேண்டுமா? அதற்கு வழிகாட்டியும் அதுவே தான்!

வாழைத்தண்டு போல் மெல்லிய உடல் வேண்டுமா,சிறு நீரகத்தில் கல்லா,உடல் பெருத்துக்கொண்டே போகிறதா?

வாழைத்தண்டு போல் மெல்லிய உடல் வேண்டுமா,சிறு நீரகத்தில் கல்லா,உடல் பெருத்துக்கொண்டே போகிறதா? வெய்யிலின் தாக்கத்தால் நாளெல்லாம் நாவரண்டு போகிறதா? எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு அந்த வாழைத் தண்டிலேயே இருக்கிறது!

தென்கிழக்கு ஆசியா முழுதும் பெருமளவில் விளையும் வாழையை அதிகம் பயன்படுத்தி வருபவர்கள் மலையாளிகளும்,பர்மியர்களும் மட்டும்தான். அங்கெல்லாம் வாழை கிழங்கு முதல் இலைவரை எல்லாவற்றையும் சமையலில் பயன்படுத்தி விடுகிறார்கள். அதிலும், பர்மியர் உணவில் வாழைத்தண்டு ஜூஸ் தவராமல் இடம்பெறும்.

கோடைக்கு நாமும் வாழைதண்டு செய்து சாப்பிடலாம். ஆனால் அதைவிட சுலபமான ஒரு ரெசிப்பி இருக்கிறது. அதுதான் வாழைத்தண்டு ஜூஸ்!

வாழைத்தண்டு

எப்படி செய்வது,என்னென்ன வேண்டும்?

அதிகமில்லை ஜெண்டில்மேன்,
வாழைத்தண்டு 6 இஞ்ச் நீள துண்டு
ஒரு இஞ்ச் நீள இஞ்சி துண்டு 
எலுமிச்சை ஒரு துண்டு (அல்லது) நான்கு எலுமிச்சை இலைகள்
ஒரு கப் தயிர்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
அவளவுதான் மேட்டர்!

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக வெட்டுங்கள்.நார்கள் தடுத்தால் கூர்மையான கத்தியை பயன்படுத்துங்கள்.வெட்டிய துண்டுகளை அள்ளி மிக்சியில் போடுங்கள். நார்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அதையெல்லாம் மிக்சி பார்த்துக்கொள்ளும்.பிரீத்திக்கி நான் கேரண்டி!

இப்போது துண்டுகளாகி விட்ட தண்டுடன்,இஞ்சியை சேர்த்து அரையுங்கள்.
மிக்சி தினறினால் அந்த தயிரைக் கொஞ்சம் சேர்த்து,உப்பு போட்டு அரைத்து எடுத்து வடிகட்டுங்கள்.

வாழைத்தண்டு ஜூஸ்

அத்துடன் மீதியுள்ள தயிரையும் நான்கு கப் தண்ணீரும் பெருங்காயமும் சேர்த்து கலக்கி,அதில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழியுங்கள். எலுமிச்சம் பழம் இல்லையா,நான்கு எலுமிச்சை இலைகளை பறித்து கிள்ளிப் போட்டு, தூக்கி ஃபிரிஜில் வைத்து அரைமணி நேரம் கழித்து குடித்துப் பாருங்கள்.ஜில்லோ ஜில்! இது வெறும் குளிர்பானம் அல்ல,வைட்டமினின் ஏ,பி6,சி இவற்றுடன் நார்சத்தும் இருக்கிறது. அதுதான் நார்களையெல்லாம்  ஃபில்ட்டர் பன்னிட்டனே என்று காமெடி செய்ய வேண்டாம்,வெய்யில் காலம்!