கோடைக்கால ஸ்பெஷல்: 1 உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆர்கானிக் கேரட் ஜூஸ்!

 

கோடைக்கால ஸ்பெஷல்: 1 உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆர்கானிக் கேரட் ஜூஸ்!

இது கொஞ்சம் புதுசு,பயப்படாம செஞ்சு சாப்பிடுங்க,வெய்யில் காலத்துக்கு ஏத்த சத்தான ஆர்கானிக் ஐட்டம்!

இது கொஞ்சம் புதுசு,பயப்படாம செஞ்சு சாப்பிடுங்க,வெய்யில் காலத்துக்கு ஏத்த சத்தான ஆர்கானிக் ஐட்டம்!

தேவையான பொருட்கள் :

ஆர்கானிக் கேரட் பெரியது – 1
பனை வெல்லம் ஒரு சிறிய துண்டு அல்லது ஆர்கானிக் பனஞ்சர்கரை ஒரு ஸ்பூன்
ஒரு இஞ்ச் நீளமுள்ள லவங்க பட்டை
தேங்காய் கால் மூடி

carrot juice

இது எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டுங்கள். பிறகு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டினால் ஆர்கானிக் கேரட் ஜுஸ் ரெடி!

carrot juice

சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து குடியுங்கள்.அலுவலகம் போகிறவர்கள் அல்லது வெய்யில் நேரத்தில் வெளியே போகிறவர்கள் இதை காலையிலேயே தயாரித்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி ஃபீசரில் போட்டு வைத்து விடுங்கள். வெளியே கிளம்பும் போது எடுத்து பையில் போட்டுக்கொண்டு போனால், தாகம் வரும்போது குடிக்க வசதியாக இருக்கும்.

carrot juice

குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பினால் இன்னும் சிறப்பு,கேரட்டில் வைட்டமின் ஏ,வைட்டமின் டி,பீட்டாகேரட்டீன்,போன்ற சத்துக்கள் உள்ளன.பனை வெல்லம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன்,இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது, இலவங்கப்பட்டை சளி மற்றும் நோய் தொற்றுக்களை தடுக்கக்கூடியது.

carrot juice

லவங்கம் தேங்காய் இரண்டுமே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவக்கூடியவை.இது வளரிளம் பருவத்தினருக்கு மிகவும் அவசியமானவை.தவிர,தொடர்ந்து இதை குடிக்கும் போது ஸ்கின் பளபளப்பாக மாறிவிடும். ஆகவே,இந்த நல்ல முயற்சியை இந்தக் கோடையிலேயே தொடங்குங்கள்.

கேரட் ஜூஸ்

இதையும் படிங்க: சப்பாத்திக்கு சுவையான மொச்சை மசாலா