கோடைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம் : முழு விவரம் உள்ளே!

 

கோடைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம் : முழு விவரம் உள்ளே!

குளிர்காலம் முடிவடைந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. அதற்கு முன்னரே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

குளிர்காலம் முடிவடைந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. அதற்கு முன்னரே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கோடைக்காலத்தின் போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கோ அல்லது வெளியூர்களுக்கோ செல்வது வழக்கம். அதனால் மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதற்கான விவரங்களையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 

ttn

  • ஏப்ரல் 8, 15, 22, 29 மற்றும் மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை செல்லும் சிறப்புக் கட்டண ரயில் தாம்பரத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 
  • நாகர்கோவிலிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சிறப்புக் கட்டண ரயில் ஏப்ரல் 9, 16, 23, 30 மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலிலிருந்து இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்குச் சென்னை சென்ட்ரல் சென்றடையும். 
  • எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் சிறப்பு மின்கட்டண ரயில் ஏப்ரல் 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். 
  • வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் சிறப்புக் கட்டண ரயில் ஏப்ரல் 5, 12, 19, 26,மே 3, 10, 17, 24,  31 மற்றும் ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 
  • எர்ணாகுளத்திலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் சிறப்புக் கட்டண ரயில் ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28 மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.  
  • ராமேஸ்வரத்திலிருந்து எர்ணாகுளம் வரை செல்லும் சிறப்புக் கட்டண ரயில் ஏப்ரல் 3, 10, 17, 24,மே 1, 8, 15, 22, 29 மற்றும் ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்திலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது என்று அறிவிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.