கோடைக்காலத்தில் சென்னை மக்களுக்குத் தண்ணீர் பிரச்சனை இருக்காது : அமைச்சர் வேலுமணி

 

கோடைக்காலத்தில் சென்னை மக்களுக்குத் தண்ணீர் பிரச்சனை இருக்காது : அமைச்சர் வேலுமணி

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரத்தில் கடும் குளிரும் பகல் நேரத்தில் கடும் வெப்பமும் இருந்து வருகிறது

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரத்தில் கடும் குளிரும் பகல் நேரத்தில் கடும் வெப்பமும் இருந்து வருகிறது. வெயில் காலம் வந்தாலே மக்களுக்கு ஒரே பிரச்சனை குடிநீர் தான். கோடைக்காலத்தின் போது வெப்பம் அதிகமாக இருப்பதால் நீரின் தேவை அதிகமாகிறது. அதனால் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை கூடுதலாகப் பெய்திருப்பதாலும் நீர் நிலைகள் நிரம்பியிருப்பதாலும் குடிநீர் பிரச்னை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ttn

இந்நிலையில் சென்னை கண்ணகி நகரில் ஓவியக்கலை நிகழ்ச்சியைத் துவங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, இந்த ஆண்டு கோடைகாலத்தில் சென்னை மக்களுக்குக் குடிநீர் பிரச்னை இருக்காது என்று தெரிவித்தார். தொடர்ந்து, மழை நீர் அதிகம் தேங்காத வண்ணம் சென்னை மாற்றப்பட உள்ளதாகவும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பல நீர் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் வண்ண மயமான ஓவியம் வரைய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.