கோடிக் கணக்கில் வருவாய் பார்த்தாலும் கம்பெனி இன்னும் நஷ்டத்துல ஓடுது

 

கோடிக் கணக்கில் வருவாய் பார்த்தாலும் கம்பெனி இன்னும் நஷ்டத்துல ஓடுது

பிளிப்கார்ட் இன்டர்நெட் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.1,624 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டை அதன் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1.12 லட்சம் கோடிக்கு விற்று விட்டனர். பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான வால்மார்ட்டிடம் தற்போது அந்த நிறுவனத்தின் 77 சதவீத பங்குகள் உள்ளன. ஆன்லைன் சில்லரை வர்த்தகத்துக்கு பிளிப்கார்ட் இன்டர்நெட் பிரிவை வால்மார்ட் நிறுவனம் பயன்படுத்துகிறது.

வால்மார்ட்டுக்கு கைமாறிய பிளிப்கார்ட்

கடந்த 2018-19ம் நிதியாண்டில் பிளிப்கார்ட் இன்டர்நெட் நிறுவனம் ரூ.1,624 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் பிளிப்கார்ட் நிறுவனம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் செலவை 30  சதவீதம் வரை குறைத்த பிறகும் நஷ்டம் அதிகரித்து இருப்பது, வால்மார்ட் நிறுவனம் அந்த நிறுவனத்தில் முதலீட்டை அதிகரிக்க தொடங்கி இருப்பதை வெளிப்படுத்துகிறது.

வால்மார்ட்

மேலும், 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரையிலான நிதியாண்டில் பிளிப்கார்ட் இன்டர்நெட்டின் வருவாய் 51 சதவீதம் அதிகரித்து ரூ.4,234 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல்களை பிளிப்கார்ட் இன்டர்நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.