கோடிக்கணக்கில் பணப்புழக்கம்… தினமும் கொள்ளையடித்து செல்லும் கும்பல் | வெளியான வீடியோ காட்சிகள்!

 

கோடிக்கணக்கில் பணப்புழக்கம்… தினமும் கொள்ளையடித்து செல்லும் கும்பல் | வெளியான வீடியோ காட்சிகள்!

கோவை அவினாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ளது சோமசுந்தரம் சாலை. பல மாநிலத்தவரும் அதிகம் வந்து போகும் இந்த சாலையில் மட்டும் தினமும் பல கோடி ரூபாய் அளவில் வணிகம் நடைபெறும்.

கோவை அவினாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ளது சோமசுந்தரம் சாலை. பல மாநிலத்தவரும் அதிகம் வந்து போகும் இந்த சாலையில் மட்டும் தினமும் பல கோடி ரூபாய் அளவில் வணிகம் நடைபெறும்.

theft

இந்நிலையில் இந்த சாலையில், பூட்டியிருக்கும் கடைகளை உடைத்து, கல்லா பெட்டியில் இருக்கும் ரொக்க பணத்தை மட்டும் ஒரு கும்பல் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கொள்ளையடித்து வந்தது. இது தொடர்பாக புகார்களும் காவல் துறையிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பாக மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, கடையைத் திறந்து கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

theft

தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைக்காததால் காவல்துறையினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.ஒரே பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இந்த திருட்டு சம்பவங்கள் வணிகர்கள் மத்தியிலும், அந்த பகுதிகளில் இருக்கும் மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.