கோடிக்கணக்கில் நஷ்டம்: BSNL நிறுவனத்தை மூட வாய்ப்பு?

 

கோடிக்கணக்கில் நஷ்டம்: BSNL நிறுவனத்தை மூட வாய்ப்பு?

1851ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இப்போது 1.75 லட்சம் ஊழியர்கள் வேலை செய்யும் BSNL நிறுவனம் விரைவில் மூடப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: 1851ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இப்போது 1.75 லட்சம் ஊழியர்கள் வேலை செய்யும் BSNL நிறுவனம் விரைவில் மூடப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

BSNL நிறுவனத்தை மூடினால் என்ன பாதிப்புகள் உருவாகும் என்ற அறிக்கை ஒன்றை தயார் செய்து கொடுக்குமாறு மத்திய அரசு கேட்டுள்ளது. 2016-2017ம் ஆண்டறிக்கையின் படி BSNL அந்த ஒரு ஆண்டில் மட்டும் 4,793 கோடிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளது.. 2017-2018ம் ஆண்டுக்கான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. எனினும் நிலைமை மிக மோசமாக போகவே வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அளவுக்கு பிஎஸ்என்எல் தங்கள் நெட்வொர்க்கை மேம்படுத்தாதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களின் தலையீடு காரணமாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு 4ஜி லைசன்ஸ் வழங்கப்படவில்லை என சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் அரசாங்க நிறுவனங்கள் எல்லாம் தனியார் வசம் செல்வது இந்த ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆயுட்காலம் எவ்வளவு என பொறுத்திருந்து பார்ப்போம்.