கோடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி?: அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

 

கோடநாடு  மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி?: அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

கோடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய மர்ம  மரணங்களுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறுவது கற்பனையானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய மர்ம   மரணங்களுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறுவது கற்பனையானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது, எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்ற வடநாட்டு நபர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொள்ளை சம்பவத்திற்குக் காரணமானவராக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவர், சாலை விபத்தில் மரணம் அடைந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் சென்றபோது நேர்ந்த விபத்தில், மகள் மற்றும் மனைவியை இழந்த நிலையில், அவர் மட்டும் உயிர் பிழைத்தார். 

kodanad

அதேபோல், கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் என்ற இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருப்பது என்பது தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. 

kodanad

இந்நிலையில், கேரளா விபத்தில் உயிர்பிழைத்த சயான் தற்போது பிரபல புலனாய்வு பத்திரிகையான தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

jayakumar

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ‘கோடநாடு விவகாரத்தில்அரசின் நல்லபெயரை கெடுக்கதிட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கு கெட்டபெயரை ஏற்படுத்த உள்நோக்கோடு சதி அரங்கேறியிருக்கிறது.கோடநாடு விவகாரம் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் கற்பனையானது. கோடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன? காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.