கொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி ! நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் !

 

கொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி ! நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் !

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பப்பாளிப் பழத்தின் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம்…

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பப்பாளிப் பழத்தின் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம்…

பப்பாளி வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க உதவும். பப்பாளியில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்கள், ஏ, சி, ஈ மற்றும் பி ஆகியவற்றின் மூலமாகும்.

பப்பாளி பழம் எடை குறைக்க உதவும். ஏன் என்றால் இதில் என்சைம்களை கொண்டுள்ளது. மேலும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்க பப்பாளி மிகச் சிறந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். இன்சுலினை அதிகரிக்கும். பப்ளியில நார்சத்து உள்ளது. மலச்சிக்கலை நீக்குகிறது. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் தொடர்ந்து பூசி வந்தால் புண்கள் ஆறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், நாக்குப்பூச்சிகள் அழிந்து போகும்.

pappaya

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் இருந்தால் அதன்மேல் பூசி வந்தால்  வீக்கம் விரைவில் கரைவதை பார்க்கலாம். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால், வலியும், விஷமும் இறங்கும் என்பது உறுதி. பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.