கொள்ளையை மறைக்க புது டெக்னிக்… ஆனாலும் இவ்வளவு புத்திசாலித்தனம் ஆகாது!?

 

கொள்ளையை மறைக்க புது டெக்னிக்… ஆனாலும் இவ்வளவு புத்திசாலித்தனம் ஆகாது!?

விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்டமாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா என்று சோதித்துப் பார்த்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், காந்திநகர் ஆலமரம் என்னும் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் சொந்தமாக பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.

Shop

அந்த கடையில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், காணாமல் போனதால் கிருஷ்ணன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்டமாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா என்று சோதித்துப் பார்த்துள்ளனர். அப்போது, கடையில் திருடுவதற்கு முன் அந்த திருடன் செய்த காட்சியைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைத்துள்ளனர். 

Camera footage

அந்த சிசிடிவி கேமரா பதிவில், கடையின் மேற்கூரை வழியாக உள்ளே குதித்த திருடன் சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்துள்ளான். அவன் திருடுவது கேமராவில் பதிவாகாமல் இருக்க, அந்த கேமராவை வேறு திசையில் திருப்பிவிட்டு பணத்தைத் திருடியுள்ளான். பிறகு, அந்த கேமராவை முன்னிருந்த திசையிலேயே மீண்டும் திருப்பி வைத்து விட்டுச் சென்றுள்ளான். திருடுவது தெரியாமல் இருக்க கேமராவை திருப்பிய திருடன், கேமராவை திருப்பும் போது அவன் முகம் அதில் தெளிவாக பதிவாகும் என்பதை மறந்துவிட்டான் போல. அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அந்த திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.