கொள்ளையர்களைப் பிடித்ததால் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவலர்கள்..!

 

கொள்ளையர்களைப் பிடித்ததால் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவலர்கள்..!

கடந்த ஜனவரி மாதம் திருச்சி, சமயபுரம் அருகே இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு வங்கியிலிருந்த லாக்கரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் திருச்சி, சமயபுரம் அருகே இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு வங்கியிலிருந்த லாக்கரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து 9 மாதங்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினரால் அந்த கொள்ளையைச் செய்தவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 

Bank

இந்நிலையில், திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படை காவல் அமைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசித் தேடி வந்தனர். அதில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டதையடுத்து மற்ற இரு முக்கிய குற்றவாளியான சுரேஷ் மற்றும் முருகன் தானாக வந்து சரணடைந்தனர். முருகன் அளித்த வாக்குமூலத்தின் படி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையில் முருகனுக்கும், சுரேஷுக்கு தொடர்பு உள்ளது என அறிந்த காவல்துறையினர், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட மற்ற நபர்களான கணேஷ் மற்றும் ராதாகிருஷ்ணனையும் கைது செய்தனர்.

Murugan

இதனையடுத்து, 9 மாதங்களுக்குப் பிறகு வலைவீசித் தேடிவந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் கொள்ளையர்களை கண்டுபிடித்து கைது செய்ததால் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர் மொட்டையடித்து நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன .