கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்து!

 

கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்து!

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கீழ ராமநல்லூர் கிராமத்தின் நான்கு புறமும் கொள்ளிடம்  ஆறுசெல்கிறது. கிராமத்தின் வடபகுதியில் மேம்பாலம் இருந்தபோதிலும் இக்கிராம மக்களின் அனைத்து தேவைகளுக்கும் தஞ்சை மாவட்டத்தையே சார்ந்துள்ளனர். இதனால் கிராமத்தில் தென்பகுதியில் செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றை கடந்துதான் தஞ்சை மாவட்டத்திற்கு செல்லமுடியும்.

கொள்ளிடம்

 கொள்ளிடம் ஆற்றில் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் செல்வதால் படகின் மூலமே இக்கரையில் இருந்து அக்கரைக்கும் அக்கரையிலிருந்து இக்கரைக்கும் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு 30 பேர் படகில் பயணம் செய்துள்ளனர். 

கொள்ளிடம் ஆற்றின்  நடுவே செல்லும் போது படகு நிலை தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 30 பேரில், 10 பேர் மாயமாகியுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.