கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நீடிப்பாரா தினேஷ் கார்த்திக்? கொல்கத்தா அணி நிர்வாகம் புதிய அறிவிப்பு!

கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நீடிப்பாரா தினேஷ் கார்த்திக்? கொல்கத்தா அணி நிர்வாகம் புதிய அறிவிப்பு!

2020 சீசனுக்கான ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. பல வீரர்கள் கோடிகளை பெற்று ஆச்சர்யப்படுத்தினர். மேலும் சிலர் ஆரம்பவிலைக்கு கூட விலைபோகாமல் ஏமாற்றம் அடைந்தது ரசிகர்களையும் ஏமாற்றியது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வென்று கொடுத்த இங்கிலாந்து கேப்டன் ஐயன் மார்கன் கொல்கத்தா அணியால் 5.25 கோடிக்கு எடுக்கப்பட்டார்.

2020 ஐபிஎல் சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக யார் இருப்பார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Dinesh Karthick

2020 சீசனுக்கான ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. பல வீரர்கள் கோடிகளை பெற்று ஆச்சர்யப்படுத்தினர். மேலும் சிலர் ஆரம்பவிலைக்கு கூட விலைபோகாமல் ஏமாற்றம் அடைந்தது ரசிகர்களையும் ஏமாற்றியது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வென்று கொடுத்த இங்கிலாந்து கேப்டன் ஐயன் மார்கன் கொல்கத்தா அணியால் 5.25 கோடிக்கு எடுக்கப்பட்டார்.

மேலும், மிகப்பெரிய தொகையான 15.50 கோடி கொடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் எடுக்கப்பட்டார் கொல்கத்தா அணிக்கு எடுக்கப்பட்டார். அதேபோல விசித்திரமான சுழல்பந்துவீச்சாளர் என கருதப்படும் வருண் சக்கரவர்த்தி 4 கோடிக்கு கொல்கத்தா அணியால் எடுக்கப்பட்டார்.

Cummins

இந்நிலையில், கடந்த இரண்டு சீசன்களாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வரும் தினேஷ் கார்த்திக் தலைமையில் அணியால் சிறப்பாக செயல்படமுடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. வீரர்கள் மத்தியில் கருத்து வேறுபாடும் சென்ற சீசனில் இருந்தது.

இதற்கிடையில், மார்கன் அணிக்கு எடுக்கப்பட்டதால், அடுத்த சீசனில் இவர் கேப்டனாக இருக்கலாம் என கருத்துகள் வெளிவந்தது. ஆனால், இதற்க்கு பதில் அளித்துள்ளார் பிரண்டன் மெக்கல்லம்.

பிரண்டன் மெக்கல்லம் கூறுகையில், “எந்தவித விமர்சனத்திற்கும் செவிசாய்க்கவில்லை. தினேஷ் கார்த்திக் திறமை மீது அணி நிர்வாகத்திற்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அடுத்த சீசனில் அவரே கேப்டனாக நீடிப்பார். மார்கள் அனுபவம் தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய உதவும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அணிக்கு பாட் கம்மின்ஸ் வர இருப்பதால், கூடுதல் பலமே” என்றார்.