கொலை மிரட்டல் என்னை ஒன்றும் செய்யாது! – ரஜினி ரசிகர்களுக்கு நாஞ்சில் சம்பத் பதில்

 

கொலை மிரட்டல் என்னை ஒன்றும் செய்யாது! – ரஜினி ரசிகர்களுக்கு நாஞ்சில் சம்பத் பதில்

ரஜினி ரசிகர்கள் விடுக்கும் கொலை மிரட்டல்கள் எல்லாம் என்னை பாதிக்கவில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

ரஜினி ரசிகர்கள் விடுக்கும் கொலை மிரட்டல்கள் எல்லாம் என்னை பாதிக்கவில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

sampath

ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து வருகிறார் நாஞ்சில் சம்பத். இதனால் ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து நாஞ்சில் சம்பத்துக்கு தொலைப் பேசி மூலமாகவும், அவருடைய சமூக ஊடக பக்கங்களிலும் மிரட்டல்கள், ஆபாச பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரஜினி ரசிகர்களின் ஆபாச அர்ச்சனைகளும் கொலை மிரட்டல்களும் என்னை கொஞ்சமும் பாதிக்கவில்லை. மரணத்தின் வாசல் வரை போய்விட்டு வந்தவன் நான் மண்ணாங்கட்டிகளுக்கு அஞ்சுவதாக இல்லை” என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் ரஜினி ரசிகர்களை மேலும் எரிச்சலுடைய செய்துள்ளது. பலரும் ஆபாசமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.