கொலை செய்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி! – பழைய விஷயத்தை கிளறி தாக்கிய தி.மு.க எம்.எல்.ஏ

கொலை செய்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி! – பழைய விஷயத்தை கிளறி தாக்கிய தி.மு.க எம்.எல்.ஏ

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் தன் சகோதரர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் ஆயுள் கைதி ஆகவேண்டியவர். விசாரணையில் சாட்சிகள் பிறழ் சாட்சிகளானதால் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது மூன்று கொலை வழக்கு இருந்ததாக சொல்லப்படுவது உண்டு.

எடப்பாடி பழனிசாமி கொலை செய்தவர் என்றும் தற்போதும் ரவுடி போலத்தான் வலம் வருகிறார் என்று தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் தன் சகோதரர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் ஆயுள் கைதி ஆகவேண்டியவர். விசாரணையில் சாட்சிகள் பிறழ் சாட்சிகளானதால் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது மூன்று கொலை வழக்கு இருந்ததாக சொல்லப்படுவது உண்டு.
இந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டம் ஒன்றில் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் எடப்பாடி பழனிசாமியின் கடந்தகால வரலாறு பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பழகன் பேசியது விவரம் வருமாறு:
“எதற்கெடுத்தாலும் தான் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மண்வெட்டி பிடித்த கை எனது கை என்கிறார். ஆனால், அதே மண்வெட்டியை வைத்து அவர் பலரைக் கொன்றிருக்கிறார். அப்படி கொலை செய்ததற்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கிலிருந்து தற்போது அவர் வெளிவந்திருக்கலாம்.

eps-in-farmfield

ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்காக இதை சொல்கிறேன். அவரைப் பார்த்தால் ஒரு முதல்வர் போலவே தெரியாது, சட்டையை மடித்துவிட்டு ஒரு ரவுடி போலவே வலம் வருகிறார்.
இதைப்போலத்தான் அமைச்சர் ஒருவரும் இருக்கிறார். அவர் பெயர் ராஜேந்திர பாலாஜி. அவரை அருகில் சென்று பார்த்தால் அவருடைய முகமும் ஹட்ச் விளம்பரத்தில் வரும் நாயின் முகமும் ஒன்று போலவே இருக்கும். எதற்கெடுத்தாலும் யாரைப் பற்றி பேசினாலும் வெட்டுவேன், குத்துவேன் என்பவர் அவர். ஒரு நாட்டில் அமைச்சரே இப்படி இருந்தால் இந்த அரசாங்கம் எப்படி இருக்கும்” என்றார்.