கொலம்பிய நாட்டுப் பெண்ணுக்கு மும்பையில் பாலியல் தொந்தரவு !  போலீஸ் மீது புகார் !!

 

கொலம்பிய நாட்டுப் பெண்ணுக்கு மும்பையில் பாலியல் தொந்தரவு !  போலீஸ் மீது புகார் !!

கொரோனா அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலம்பிய நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் மும்பைக்கு வந்திருந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக அவர் சொந்த நாட்டிற்கு செல்ல முடியவில்லை.

ஊரடங்கு உத்தரவால் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் மும்பையில் தங்கி இருக்கும் பெண்ணுக்கு போலீஸ் ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலம்பிய நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் மும்பைக்கு வந்திருந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக அவர் சொந்த நாட்டிற்கு செல்ல முடியவில்லை. 
இவர் காவல்துறையிடம் ஈமெயில் மூலம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தான் தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்குள் வந்து ஒரு போலீஸ்காரர் பாலியல் தொல்லை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை ஏற்று விசாரித்த மூத்த காவல்துறை அதிகாரி குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளார். 

woman-abuse

அவர் எழுதியுள்ள புகாரில் ” நான் பிப்ரவரி 22ம் தேதி மும்பைக்கு சுற்றுலா விசாவில் வந்து மார்ச் 31 வரை பாந்த்ரா ஹோட்டலில் தங்கியிருந்தேன். ஊரடங்கு காரணமாக நான் என் நாட்டிற்கு திரும்ப செல்ல முடியவில்லை. அனைத்து பணமும் செலவாகி விட்டது. பின்னர் டெல்லியில் உள்ள கொலம்பிய தூதரகத்தை அணுகி எனக்கு உதவும்படி கோரினேன். அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி அந்தேரியில் உள்ள விடுதியில் தங்குவதற்கு மும்பை காவல்துறை அதிகாரி எனக்கு உதவினார். பின்னர் என்னை அவர் மதுபானம் அருந்த வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். பின்னர் என்னுடை செல்போனுக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்பினார். பின்னர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் மறுத்துவிட்டேன். அவரை பிடித்து வெளியில் தள்ளினேன். அப்போது அந்த அதிகாரி தங்குவதற்கான வாடகையை கொடுத்துள்ளால் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய உரிமை இருப்பதாக கூறினார். இதையடுத்து அந்த அதிகாரி ஓட்டல் நிர்வாகத்தினரை அழைத்து தனக்கு உணவு, உடை எதுவும் வழங்கக்கூடாது என உத்தரவிட்டார். நான் பசியால் பல நாட்கள் துடித்தேன். பின்னர் இந்த வீடியோ என் நாட்டிற்கு அனுப்பினேன். அது வைரலானது. இந்த தகவல் அறிந்து வந்த மும்பை போலீசார் மருத்துவருட வந்து என்னை பரிசோதித்து எனக்கு உணவு வழங்கினர். எனவே காவல்துறையில் இருக்கும் இதுபோன்ற கருப்பு ஆடுகளை நீங்கள் கவனிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதை அறிந்த தன்னார்வலர்களும் அவருக்கு தங்கவும், உணவும் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியபோதும், விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதே சமயம் இந்த புகார் குறித்து கேள்வி கேட்ட போது சம்பந்தப்பட்ட போலீஸ் மறுத்துவிட்டார்.