கொரோனா வைரஸ்: 4 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா தற்காலிகமாக ரத்து

 

கொரோனா வைரஸ்: 4 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா தற்காலிகமாக ரத்து

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் குறிப்பிட்ட 4 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் குறிப்பிட்ட 4 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 பேருக்கு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இன்று முதல் குறிப்பிட்ட 4 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா அனுமதி இப்போதைக்கு கிடைக்காது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ttn

இதுவரை 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை படர விட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2943-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். அத்துடன் புதிதாக 125 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.